திருச்சி அருகே தனியார் முப்படை பயிற்சி மையத்தில் அடிப்படை வசதி வேண்டி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருச்சிமாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகனூர் பகுதியில் அமைந்துள்ளது தனியார் முப்படை பயிற்சி மையம். இந்த பயிற்சி மையத்தில் ராணுவம், கடற்படை, விமானத்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிய பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகள் குறித்த சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன்.
இதற்காக பல்வேறு விளம்பரங்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விளம்பரத்தை நம்பி இந்த முப்படை பயிற்சி மையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இணைந்து உள்ளனர். இந்த நிலையில் இதுவரை இந்த பயிற்சி மையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து மாணவர் கூறியதாவது:-விளம்பரத்தை நம்பி நாங்கள் இந்த முப்படை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்று வருகிறோம். இங்கு பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ராணுவம், கப்பல் துறை, காவல் துறை, போன்ற பல்வேறு அரசு துறை சார்ந்த போட்டித் தேர்வுகளுக்காக இந்த பயிற்சி மையத்தில் இணைந்து படித்து வருகின்றனர்.
ஆனால் இந்த பயிற்சி மையத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு பைப்பில் மூவர் குளிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பயிற்சி மையத்தில் வெறும் எட்டு கழிப்பறை மட்டுமே உள்ளது. இது பற்றி நிர்வாகத்தில் புகார் தெரிவித்த பொழுது இன்னும் சில தினங்களில் உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் தற்போது புதியதாக உள்ள கட்டிடத்தில் தங்குமாறு கூறினர்.
ஆனால் புது கட்டிடத்திலும் மின்சாரம், குடிநீர் வசதிகள இல்லை இது மட்டும் இல்லாமல் தொட்டியில் உள்ள நீரில் தான் குளிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. இதே போல் இரவு பத்து மணிக்கு மேல் குடிநீர் வருவதில்லை நாங்கள் கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது உரிய பதில அளிக்கமால் அலைக்கழித்து வருகின்றனர்.
உரிய கட்டணம் செலுத்தி இருந்தால் மட்டுமே உணவு வழங்கபடும் இல்லை என்றால் உங்களுக்கு உணவு இல்லை என நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். எங்களின் முதல் கோரிக்கை நாங்கள் கட்டிய தொகையினை திரும்ப கொடுத்து விட்டால் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கலைத்துவிட்டு நாங்கள் வேறொரு நல்ல பயிற்சி மையத்தில் இணைவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"சுரணையற்ற தலைமுறையை அரசியல் உருவாக்கிவிட்டது.. எனக்கு தந்தி அனுப்பியவர் கலைஞர்" - கமல்ஹாசன்!