தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

''நண்பேன்டா" - நண்பனுக்கு பதில் தேர்வெழுதிய ராணுவவீர நண்பன்

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ராணுவத்தில் பணிபுரியும் தனது நண்பனுக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவர் கைதுசெய்யப்பட்டார்.

நண்பனுக்கு பதிலாக  தேர்வு எழுதிய மாணவர் கைது
நண்பனுக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவர் கைது

By

Published : Jun 19, 2022, 5:52 PM IST

திருச்சிமாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள ஜம்புமடை கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த துரைராஜ். இவரது மகன் விஸ்வநாதன் (31). இவர் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இவரது நண்பர் தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோபிநாத்(30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கோபிநாத் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது தேர்ச்சிபெறாமல் நிலுவையில் வைத்திருந்த பி.ஏ. பொருளாதார படிப்பில், பாலின சமத்துவ கல்வி தேர்வினை நேற்று அவரது நண்பனும், ராணுவ வீரருமான விஸ்வநாதன், கோபிநாத்துக்குப் பதிலாக எழுதியுள்ளார்.

தேர்வு அறையில் இருந்த மேற்பார்வை அலுவலருக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் ராணுவ வீரருக்கு பதிலாக விஸ்வநாதன் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் விஸ்வநாதன் மீது முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விஸ்வநாதனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அப்போது நண்பனுக்குப் பதிலாக தான் தேர்வு எழுதியதை விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீட்டில் சொல்லி விடுவேன்.. ஓவர் ஓவர்.. காதலர்களை மிரட்டிய போலி போலீஸ்...

ABOUT THE AUTHOR

...view details