தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் போராட்டம்: உடலைக் கிழித்துக் கொண்ட விவசாயி! - Farmers struggle in Trichy

திருச்சியில் நடந்த போராட்டத்தில், விவசாயி கத்தியால் கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி ரவி
விவசாயி ரவி

By

Published : Jul 13, 2020, 3:26 PM IST

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கீழகல்கண்டார்கோட்டைப் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள், விவசாயிகள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ரவி என்கிற ரவிக்குமார் தான், மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு தன்னுடைய உடலைக் கிழித்து கொண்டார். பின் அவரது உடலில் ரத்தம் கொட்டியது. இதனால் பதற்றமடைந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் ரவிக்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர், கத்தியால் கிழித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:அரசின் உத்தரவை மீறி நடைபெற்ற கூட்டுறவு வங்கியின் கட்டுமான பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details