தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடுகளை கொன்று ரத்தம் உறிஞ்சும் மர்ம விலங்கு; மக்கள் கிலி! - people in distress

திருச்சி: மணப்பாறை அருகே செம்மறி ஆடுகளை கொன்று குவிக்கும் மர்ம விலங்கால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஆடுகளை கொன்றுவரும் மர்மான விலங்கு; பீதியடையும் மக்கள்

By

Published : Jun 14, 2019, 10:18 AM IST

Updated : Jun 14, 2019, 12:03 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரிய மலைப்பகுதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கணவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். நேற்று தனக்கு சொந்தமான 50 செம்மறி ஆடுகள் பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.

நேற்று, பட்டியை வந்து பார்த்தபோது அதில் பாதிக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட வனத் துறையினர், மருத்துவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எஞ்சிய செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இதுபோல் மர்ம விலங்கு ஒன்று தொடர்ந்து செம்மறி ஆடுகளை தாக்கி வருவதாகவும், அந்த விலங்கு ஆடுகளின் கழுத்துப் பகுதியில் கடித்து ரத்தத்தை மட்டும் உறிஞ்சி உயிரை கொல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆடுகளை கொன்றுவரும் மர்ம விலங்கு; பீதியில் மக்கள்

எனவே மாவட்ட நிர்வாகத்துடன் வனத்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Last Updated : Jun 14, 2019, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details