தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அகதிகள் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் - இலங்கை அகதிகள் முகாம்

இலங்கை அகதிகள் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

refugee camps
refugee camps

By

Published : Jun 30, 2021, 7:26 AM IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களைச் சந்தித்து குறைகேட்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு திருச்சி ஆட்சியர் சிவராசு தலைமை வைத்தார். அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசர், மக்களவை உறுப்பினர் சிவா, சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இட ஒதுக்கீடு

அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் 1990ஆம் ஆண்டிலிருந்து 3 தலைமுறைகளாக அகதிகளாக வாழ்வதாகவும், தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதேபோல் மாதம் இரண்டு முறை முகாமில் தணிக்கை நடைபெறுவதால், வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறுவதால், அவர்களின் வேலைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

மேல்படிப்பு படிப்பதற்கும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும். 107 அகதி முகாமில் உள்ள நிலையில் ஐந்து பேருக்காவது மருத்துவக் கல்வி கற்க இடம் ஒதுக்கித் தரவேண்டும் எனக்கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

தரமான கல்வி வழங்க வேண்டும்

'இந்த நாட்டை விட்டு இலங்கைக்கு மீண்டும் செல்லும்போது இங்கிருந்து கற்ற கல்வியைத் தான் எடுத்துச் செல்ல முடியும். அதனால் நல்ல கல்வியை வழங்க வேண்டும். முகாமிற்கு 2 அங்கன்வாடி ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கட்டட வசதி இல்லை. குடிநீர் பிரச்னை உள்ளது.

காவிரி குடிநீர் சரியாக வருவதில்லை. இங்கு உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. மின்சார கம்பங்கள் பழுதடைந்து உள்ளன. அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.

முகாமில் 120 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதனை உடனடியாக மருத்துவக் குழுவினர் கட்டுக்குள் கொண்டு வந்ததனர். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த கரோனா நிதி கிடைத்தது.

அதேபோல் 100 நாள் வேலை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை' என்று மக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடிச் சென்று பிரச்னைகளை அறிந்து வர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அதன்படிதான் அமைச்சர்கள் அனைவரும் மக்களை சந்தித்துப் பிரச்னைகளைக் கேட்டறிந்து வருகிறோம். உங்களது பிரச்னைகள் குறித்த மனுக்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த 7 முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளின் வாக்கியங்களில் 4ஆவது வாக்குறுதியாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி நான் இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் மாவட்ட அமைச்சராகவும் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

மருத்துவம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அங்கன்வாடி கட்டடம் கட்டி கொடுக்க ஆட்சியரிடம் பேசப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கு வழி வகை செய்யப்படும்.

உங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பதுடன் உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக முக்கியத்துவம் கொடுத்து தீர்க்கப்படும். தற்போது தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாக ஆட்சியர் நிதி ஒதுக்கி உள்ளார்' என்றார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கட்ட நடவடிக்கை

இவரைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், 'தற்போது தமிழ்நாட்டில் மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படக்கூடிய ஆட்சி அமைந்துள்ளது.
விழுப்புரம் மரக்காணத்தில் உள்ள அகதிகள் முகாமில் 454 குடும்பங்களில் 967 பேர் உள்ளனர். இந்த முகாமில் உள்ள வீடுகள் நெருக்கமாக உள்ளது. அந்த இடத்தைப் பொறுத்து, அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதற்கு ஆய்வு செய்யப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புத்திட்டம் திருச்சியில் தான் முன் மாதிரியாக கொண்டு வரப்படும். 10 ஆண்டிற்கு ஒருமுறை மின்சாரம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், 30 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். மின்சாரத்துறை அமைச்சர் மூலமாகவும் சீரமைக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த தாய் கைது!

ABOUT THE AUTHOR

...view details