திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான 10ஆவது மாநில கிக் பாக்ஸிங் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பிரபு தொடங்கிவைத்தார்.
மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி - Trichy
திருச்சி: பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற 10ஆவது மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் ஏரளமானோர் பங்கேற்றனர்.
மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி
இதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், இப்போட்டியில் சங்க பொதுச்செயலாளர் விக்டர் குழந்தைராஜ், தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்க தலைவர் ஈஸ்வர்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.