தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணி! - Etv bharat

State-level karate competition in Trichy: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சேர்ந்த அணியினர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணி
மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 4:45 PM IST

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணி

திருச்சி: மாநில அளவிலான கராத்தே போட்டி திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஜமால் முகமது கல்லூரியிலுள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிக்குத் தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமை ஏற்றார். ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அசாம், கோவா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியானது கட்டா, குமிட்டே என்ற அடிப்படையில் 175 பிரிவுகளில் கீழ் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சேர்ந்த அணியினர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றனர். மேலும், இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு SKWF-னால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் தலைமை நடுவர் பத்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ஒரு பெண்ணாக உள்ளேன். தற்காப்புக் கலையான கராத்தே கலையைப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் தற்காப்புக் கலையை கற்பதால் சமூகத்தில் பாதுகாப்பு ஏற்படுகின்றது. கராத்தே தற்காப்புக் கலையாக இல்லாமல் உயிர் காக்கும் கலையாக உள்ளது. உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. கராத்தே கலை கற்றுக் கொள்வதால் உடல் ஆரோக்கியம், மன வலிமை, எந்த ஆற்றலையும் தானே எதிர்கொள்ளும் மன ஆற்றல் ஏற்படும். குறிப்பாகக் குழந்தைகள் கராத்தே கற்றுக் கொள்வதால் படிப்பில் கவனம் செலுத்தவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே அனைவரும் கராத்தே கலையை கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வீராங்கனை லீனா பேசுகையில், "நான் பல ஆண்டுகளாகக் கராத்தே கலையை கற்று வருகிறேன். பல மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் வெற்றிக் கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

கராத்தே பயிற்சியாளர் சங்கர் பேசுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்கும் தமிழக கராத்தே வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்." எனதெரிவித்தார்.

இதையும் படிங்க:திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details