தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி - school

திருச்சி: மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.

மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி!

By

Published : Aug 5, 2019, 1:56 PM IST


திருச்சி மாவட்டம் மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரண்டு நாட்களாய் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்பட தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 அணிகள் பங்கேற்றன. இரண்டாவது நாளாக இன்று நடந்த இறுதிப்போட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே திருச்சி, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பிடித்தனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பேசுகையில், 'நாம் ஹாக்கி போட்டியை தேசிய விளையாட்டாக அங்கீகரித்தாலும், அதற்கான ஆதரவு பெருமளவு இல்லை ஆகையால், ஹாக்கி போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான மைதானத்தை பொதுமக்கள் உருவாக்க முயற்சி எடுத்தால் என்னால் மட்டுமின்றி அரசின் மூலமாகவும் உதவி பெற ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்' என்று பேசினார்.

மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி!
அதன்பின்னர் மணப்பாறை காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட தாய்-சேய் ஓய்வறையை பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details