தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி- - 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 12:14 PM IST

திருச்சியில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி
திருச்சியில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி

திருச்சியில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி

திருச்சி: வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்கு நாட்டு விளையாட்டான Fencing-ஐ குறிக்கின்றது. இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் வாள் விளையாட்டு போட்டி பிரபலமான விளையாட்டாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில், 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி, திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் போட்டியாக நடைபெற்று வருகிறது.

இந்த விளையாட்டு போட்டியை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். இதில் FOIL, EPEE, SABRE ஆகிய மூன்று பிரிவுகளில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், சான்றிதழ்கள், காசோலைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கான தமிழ்நாடு அணியில் இடம் பெறுவார்கள்.

தொடர்ந்து இன்று நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில், திருச்சியின் பிரபல ஜிவிஎன் மருத்துவமனை டாக்டர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசளிக்க உள்ளார். மேலும், இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் குமார், செயலாளர் டாக்டர் கங்கை மணி, துணை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராஜ்குமார், செயல் உறுப்பினர்கள் அசாருதீன், இளம் பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாள் விளையாட்டு பயிற்சி மைதானம் நாமக்கல், சேலம், சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருப்பதைப் போன்று திருச்சி மாவட்டத்திற்கும் வாள் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி மைதானமும், பயிற்சியாளர்களும், உபகரணங்களும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட திருச்சி விஜய் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details