திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பேரூராட்சியில் ஜன் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவின் நோக்கமே டிசம்பர் 10ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகள் புள்ளம்பட்டி பேரூராட்சி பகுதியில் நட வேண்டும் என்பதாகும்.
ஒரு லட்சம் பனை விதை நடும் விழா தொடக்கம்- மாணவ, மாணவிகள் உற்சாகம் - planting start today
திருச்சி: ஒரு லட்சம் பனை விதைகள் மற்றும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
இந்நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள பெரிய ஏரி, பூ உடையான் ஏரி, புள்ளம்பாடி வாய்க்கால் பகுதிகளில் முதற்கட்டமாக 2,500 பனை விதைகள், 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஊராட்சி முன்னாள் பிரதிநிதிகள், லயன்ஸ் கிளப் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து நட்டனர். மாணவர்கள் எதிர்காலத்தின் பயனை நோக்கி உற்சாகத்துடன் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ச்சியடைந்தனர். இதில் வேம்பு, நாவல், அரசன், பலா, மகிழம், கொய்யா, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.