திருச்சி விமான நிலையத்தில், மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே விண்வெளி ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டு வந்துள்ளன. சந்திராயன் 2 தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலும் இந்த முயற்சியை மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி திமுகவின் தொகுதி. ஆகையால் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இரண்டு கட்சியும் தனித்தனியே போட்டியிட வாய்ப்பில்லை எங்கள் கூட்டணி தொடர்கிறது.
சபை நாகரிகத்திற்காக ஸ்டாலினை புகழ்ந்திருக்கலாம் - எம்.பி திருநாவுக்கரசர்! - MP Thirunavukkarasar
திருச்சி: சபை நாகரிகம் கருதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஸ்டாலினை புகழ்ந்து பேசி இருக்கலாம் என மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
எம்.பி திருநாவுக்கரசர்
யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையும் முடிவெடுக்கும். சி.பி. ராதாகிருஷ்ணனும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சபை நாகரிகம் கருதி அவரை ராதாகிருஷ்ணன் புகழ்ந்து பேசி இருக்கலாம்" என்றார்.