தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ ஆர்ப்பாட்டம்!

திருச்சி: ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SRMU protests against railway privatization in Trichy
SRMU protests against railway privatization in Trichy

By

Published : Sep 19, 2020, 4:08 AM IST

Updated : Sep 19, 2020, 5:36 AM IST

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் உள்ள திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகள் விவரம்:

  • ரயில்வே துறையை தனியார் மயமாக்ககூடாது
  • 150 பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும்
  • உற்பத்தி பராமரிப்பு பணிமனைகளை கார்ப்பரேஷன் ஆக்கக்கூடாது
  • 55 வயது, 30 வருட சர்வீஸ் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்ககூடாது
  • 2,500 டீசல் ரயில் இன்ஜின்களை கழிவு என ஒதுக்கி விற்பனை செய்யக்கூடாது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான உதவி தொழில்நுட்ப ஊழியர்கள் நிரந்தர வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்
  • டிராபிக் தொழிலாளர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் வேலைகளை பறிக்கும் வகையில் பயணிகள் ரயில்களை ரத்து செய்யக்கூடாது.
  • ரயில்களின் நிறுத்தங்களை குறைக்ககூடாது
  • ரயில்வே ஊழியர்களுக்கான போனசை ரத்து செய்யக்கூடாது

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் ரயில்வே தனியார்மயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Last Updated : Sep 19, 2020, 5:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details