திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்: விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம் - சித்திரை தேரோட்டம்
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று (மே 3) காலை நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாள் வீற்றிருந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது.
Last Updated : May 3, 2019, 3:07 PM IST