தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து ஆறாம் நாள்! - Srirangam Vaikunda Ekadasi

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து ஆறாம் நாளான இன்று (டிச.30) நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து ஆறாம் நாள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து ஆறாம் நாள்

By

Published : Dec 30, 2020, 6:24 PM IST

திருச்சி, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து நிகழ்ச்சியின் ஆறாம் நாளான இன்று (டிச.30), காலை 6 மணி முதல் 9 மணி வரை மூலவர் ரங்கநாத பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பின்னர் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு, ஆரியபட்டால் நுழைவு வாயில் திறக்கப்பட்டதுபோல, ஒரு மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. மேலும் 1 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் 2 மணிமுதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ராப்பத்து ஆறாம் திருநாளில் நம்பெருமாள் ஆறாம் நாளான இன்று ரத்தின காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், மகாலட்சுமி பதக்கம், காசுமாலை மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன் பின் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details