திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்திற்கு முந்தைய நாளில் கோயிலின் வரவு, செலவு கணக்குகள் கணக்கிடப்படும்.
அதையடுத்து ஆடி 1ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து எடுத்துவரப்படும் அங்க வஸ்திரம் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.
பட்டாடைகள் எடுத்துச் செல்லப்பட்ட போது அதன்படி நேற்று (ஜூலை15) நடப்பாண்டின் வரவு செலவு கணக்குகள் கோயில் அறங்காவலர் குழுவினர், அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று ஆடி 1ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து எடுத்துவரப்பட்ட அங்க வஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஏழுமலையானுக்கு ஜாக்பாட்: உண்டியலில் 20 தங்கக் கட்டிகள்!