திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவ புறப்பாடு நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் உற்சவர் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்தை 5.45 மணிக்கு வந்தடைந்தார்.
அங்கு அலங்காரம் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளி இரவு 7.15 மணிக்கு புறப்பாடாகி 7.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இரண்டாம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் கோயில் 2ஆம் நாள் வசந்த உற்சவ விழா
திருச்சி: ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தின் 2ஆம் நாளான நேற்று (19ம் தேதி) மாலை நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாக வசந்த மண்டத்தில் எழுந்தருளினார்.
நம்பெருமாள்
வரும் 26ஆம் தேதி வரை வசந்த உற்சப புறப்பாடு நடைபெறுகிறது. 7ஆம் திருநாளான 23ஆம் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பாடாகி, நெல்லளவு கண்டருளி மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைவார். 9ஆம் திருநாளான 26ஆம் தேதி திருமஞ்சனம் கண்டருளல், படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சேருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.