திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, பகல்பத்து திருநாள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையடுத்து இராப்பத்து விழாவின் முதல் நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2ஆம் நாளான இன்று நம்பெருமாள் சவுரி கொண்டை, நெற்றிச்சுட்டி, மார்பில் பங்குனி உத்திர பதக்கம், தங்க அவுல் சரம், ரத்தின அபயஹஸ்தம், ரத்தின காது காப்பு மற்றும் ரத்தின கிளி, பின்புறம் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக திருமாமணி மண்டபம் வந்தடைந்தார்.