தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தை ஓட்டி சென்ற எம்எல்ஏ...கியர் போட்ட ஓட்டுனர் - CM MK Stalin

திருச்சியில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அரசு பேருந்தை இயக்கி சென்றார். ஓட்டுனர் கியர் இயக்கி எம்எல்ஏவுக்கு உதவி புரிந்தார்.

ஓலையூர் வரை பேருந்து ஓட்டிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ.. எதற்காக தெரியுமா?
ஓலையூர் வரை பேருந்து ஓட்டிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ.. எதற்காக தெரியுமா?

By

Published : Nov 29, 2022, 12:31 PM IST

திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று (நவ 28) திருச்சி மாவட்டத்திற்கு வந்தார். அப்போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் சங்கத்தினர், தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திருச்சியில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அரசு பேருந்தை பயணிகளுடன் இயக்கிச் சென்றுள்ளார்

இந்த நிலையில் இன்று (நவ 29) ஓலையூர் பேருந்து நிலையத்தில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து ஶ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைதட்டி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:மாளிகைமேடு அகழ்வாராய்ச்சின் பணிகள்... முதலமைச்சர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details