ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வட இந்தியர்களால் சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. அதேபோல் மாட்டுப் பொங்கல் தினம் கணு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று (ஜன. 14) சங்கராந்தி விழா நடைபெற்றது.
இதில் உற்சவர் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று (ஜன. 15) கணு புறப்பாடு நடைபெற்றது. இதில் உற்சவர் ரங்கநாதர் முத்துக்குறி, முத்துமாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பாரிவேட்டை நடைபெறுகிறது.