திருச்சி மேலபுலிவார்டு சாலையில் உள்ள தனியார் அரங்கில் தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தமிழழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன், ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி விஜயகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் இலங்கை அகதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! - தமிழழகன்
திருச்சி: இலங்கை அகதிகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்க வேண்டும் என்று தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பாளர் தமிழழகன் வலியுறுத்தி உள்ளனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி உடனடியாக எவ்வித பாரபட்சமுமின்றி, விசாரணையுமின்றி குடியுரிமை வழங்க வேண்டும். அகதிகளுக்கு என்று மறுவாழ்வுச் சட்டம் ஒன்றையும் உருவாக்கி, அதன் அடிப்படையில் வசதிகளையும், வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, கடன் உதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியரகத்திலும் குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.