ஸ்ரீலங்கன் யாழ் உணவின் சுவையை ருசிக்க வேண்டுமா? பிரத்யேகமாக திருச்சிக்கு வந்துள்ள இலங்கை உணவுகள்! திருச்சி:நாட்டின் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளின் கலவையை திருச்சி மக்களுக்கு ஒரே இடத்தில் வழங்கும் பணியை திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் தொடர்ந்து முன்னெடுத்து கொண்டே செல்கிறது. அந்த வகையில்ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா திருச்சியில் நேற்று (18.08.2023) தொடங்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீலங்கன் யாழ் உணவின் சுவை மற்றும் ரகசியங்களை திருச்சி மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த திருவிழா வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கண்காட்சிக்காக உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது.
உண்மையான ஸ்ரீலங்கன் பாணியிலான நல்ல உணவை ருசித்து, அனுபவித்து திருச்சி மக்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக, திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தக்ஷின் நக்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்டில் 80 இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகைகள் அனைத்தும் சரியான விலையில், தினமும் மதியம் மற்றும் இரவு வேளைகளில் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை சர்வசாதாரணமாக கடந்து செல்லும் சிறுத்தை... வாகனஓட்டிகள் பீதி!
ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகையை சேர்ந்த, மாசி சம்பல் பிரியாணி வகைகள், ஆட்டுக்கால் பாயா, சிலோன் சிக்கன் கறி, கண்டி மட்டன் குருமா, சிலோன் புரோட்டா, லேம் ரைஸ், நெத்திலி மீன் வறுவல், வட்டாலப்பம், தொதல் அல்வா, நவதானிய லட்டு என யாழ் சுவையுடன் சைவ அசைவ உணவுகள் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் விருந்தினர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப எடுத்து சுவைத்து, மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். நிஜமான இலங்கை உணவின் சுவையை விருந்தினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, உணவுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த உணவை தயாரித்து வழங்கும் பணியில் ஸ்ரீலங்கன் சமையல் கலைஞர்கள் சந்திரகாந்தா, சர்மலதா மற்றும் நிர்வாக சமையல் கலைஞர் ராஜசிவநேசன், சமையல் கலைஞர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் யாழ் உணவு திருவிழா மறக்க முடியாத அனுபவத்தை தனது விருந்தினர்களின் மனதிலும், நாவிலும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அங்கு விருந்தினர்களின் கண்களை கவரும் வண்ண விளக்குகள், அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊழியர்களின் அன்பான உபசரிப்பு, இசை, பாடல்கள் என வயிருடன் மனமும் நிறைந்து விடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மூடிய வீட்டில் மூச்சு திணறி நான்கு பேர் பலி! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உயிரை பறித்தது எது?