தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு! - கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

திருச்சி: அரியமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Special Assistant Inspector of Police killed by corona!
Special Assistant Inspector of Police killed by corona!

By

Published : Jul 28, 2020, 5:16 PM IST

திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் சன்னாசி(58). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை 26) அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் சன்னாசிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 28) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாநகர காவல்துறையில் கரோனா தொற்று காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னாசி உயிரிழந்திருப்பது, அவருடன் பணியாற்றி வந்த சக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details