சென்னை: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் டிச.22 வரை பகல் பத்து திருவிழாவாகவும், 24 முதல் ஜனவரி 2 வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. பகல் பத்து நாட்களில் வரும் 22ஆம் தேதி வரை தினமும் உற்சவம் நடைபெறும்.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் நாளை (டிச.22) நடைபெற உள்ளன. அதேபோல் சொர்க்கவாசல் திறப்பு 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளன. இதற்காகத் தமிழகம் முழுவதும், பக்தர்கள் மற்றும் வைணவ அடியார்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருகின்றனர்.
இதையும் படிங்க:பழிவாங்கும் என்னத்தோடு பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம் - என்.ஆர். இளங்கோ..
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு 4 முக்கிய ரயில்கள் 2 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கத்தில், 1 நிமிடம் 4 முக்கிய ரயில்கள் நின்று செல்லும் எனவும், அதில் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், (12633) இரவு 9:54 முதல் 9:55 வரையிலும், இதே ரயில் மறு மார்க்கத்தில், நள்ளிரவு 12:53 முதல் 12:54 வரை நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை எழும்பூர் - கொள்ளம் விரைவு ரயில், 9:20 முதல் 9:21 வரையிலும், இதே ரயில் மறுமார்க்கத்தில், இரவு 9:38 முதல் 9:39 வரை நிற்கும் எனவும், தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை!