தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு தலைவர் கோபால் நாயுடு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகப்பா, ஆலோசகர் சுந்தர்ராஜ், மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவு
சுமார் 80 கிமீ., வேகத்திற்கு மிகாமல் இயங்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த உத்தரவு இதர மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
- பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்
மத்திய அரசின் அறிவிப்பின் படி, நல்ல பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில மாநிலங்கள் சில வியாபாரிகளிடம் அந்த ஸ்டிக்கரை மீண்டும் வாங்க வற்புறுத்துகிறார்கள். இதனால் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
- ஜிபிஎஸ் கருவி
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர்களே ஜிபிஎஸ் கருவி பொருத்தி விடுகிறார்கள். இந்த வாகனங்களுக்கு புதியதாக ஜிபிஎஸ் பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
- டீசல் விலை குறைப்பு