திருச்சி:சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவரின் மனைவி சிவரஞ்சனி(27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமயபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை விற்ற நரசிம்மராஜ், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் தாளகுடி சாய் நகர் அப்துல் கலாம் தெருவில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீடு விற்று கிடைத்த பணத்தை சூதாட்டத்தில் தொலைத்து வந்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும் மனைவிக்கும் மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
தனது மனைவி சிவரஞ்சனிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறும், கரோனா சரியானவுடன் வந்து அழைத்து கொள்வதாகவும் கூறி குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் புறப்பட்டு சென்றுள்ளார். திருச்சியில் உள்ள சிவரஞ்சனியுடன் அடிக்கடி செல்போனில் பேசும் அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக பேசாமல் இருப்பதை கண்டு, அவரை பார்ப்பதற்காக தாளகுடி சாய் நகருக்கு வந்துள்ளனர்.