தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையால் நேர்ந்த விபரீதம்... ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு... - ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் சாலையின் ஓரமாக நடந்து சென்ற 60 வயது மூதாட்டி ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ மோதிய விபத்து
ஆட்டோ மோதிய விபத்து

By

Published : Apr 8, 2022, 3:46 PM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரிஹரன் நேற்று (ஏப். 7) ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மா மண்டபம் நோக்கி ஆட்டோ ஓட்டி சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த இரும்பிலான தடுப்பின் மீது ஆட்டோ மோதியது. இதனால் தடுப்பு எதிரே வந்த பிரதீப் குமார் என்பவரது ஆட்டோ மீது மோதியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பிரதீப் குமாரின் ஆட்டோ சாலையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த ராதா என்னும் 60 வயது மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசர் சம்பவ இடத்திற்கு மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ மோதிய விபத்து

முதல்கட்ட விசாரணையில், ஹரிஹரன் போதையில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:ஓடும் ரயில் முன் இன்ஸ்டா ரீல்...! உடல் சிதறி பலியான 3 மாணவர்கள்...

ABOUT THE AUTHOR

...view details