திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் மங்கம்மாள்புரம், சங்கமராஜபுரம், ஆதிகுடி ஆகிய கிராம மக்கள் வாக்களித்தனர்.
அப்போது மதியத்திற்கு பிறகு வாக்குச்சீட்டில் சுயேச்சை வேட்பாளர் செல்வராணி போட்டியிட்ட சின்னம், பெயரும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் செல்வராணி அப்போதே லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையிட்டதால் 2 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்ற அலுவலர்கள் மீண்டும் வாக்குப்பதிவினை நடத்தினர்.