கரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. நாளுக்கு நாள் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் உயிர் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தங்களது உயிரை பனையம் வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் சிகிச்சை அளித்தாலும் இந்த வைரஸின் வீரியம் அதிக அளவில் உயர்ந்துள்ளது. எனவே, சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்நோயின் தொற்று ஏற்பட்டு, அதனால் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
அந்த வகையில் திருச்சி கிஆபெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றுடன் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் ஒருவர் தொடர் சிகிச்சை அளித்து வந்தார். மேலும், அந்த இளைஞரை தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்திருந்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது.