தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்டத்தில் வளர்க்கப்பட்ட செம்மரங்கள் வெட்டி கடத்தல் - உரிமையாளர் புகார்! - விசாரணை

தோட்டத்தில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான செம்மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி விட்டனர் என அந்த தோட்டத்தின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

தோட்டத்தில் இருந்த செம்மரம் கடத்தல் - தோட்டத்து உரிமையாளர் புகார்!
தோட்டத்தில் இருந்த செம்மரம் கடத்தல் - தோட்டத்து உரிமையாளர் புகார்!

By

Published : May 6, 2022, 10:12 PM IST

திருச்சி: துவரங்குறிச்சி அடுத்த களத்துப்பட்டியைச் சேர்ந்தவர், அன்பு (எ) நேரு. இவர் தனது தென்னந்தோப்பில் 25 ஆண்டுகளாக வளர்த்து வந்த செம்மரம் வெட்டப்பட்டு அடிமரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து 10 லட்சம் மதிப்புள்ள செம்மரத்தை மீட்டுத்தரக்கோரியும், மரத்தை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யக்கோரியும் துவரங்குறிச்சி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தோட்டத்தின் உரிமையாளர் அளித்தப்புகாரின் அடிப்படையில் அவரிடம் செம்மரம் வாங்கி வைக்கப்பட்டதா? அல்லது தானாக முளைத்ததா? மேலும்,செம்மரம் வளர்ப்பதற்கான பதிவு இருக்கிறதா? என விசாரணை மேற்கொண்ட நிலையில் புகார் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த செம்மரக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யூஏ சான்றிதழ்

ABOUT THE AUTHOR

...view details