தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்’ - எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் - திருச்சி அண்மைச் செய்திகள்

திருச்சி : வரகனேரி ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், “உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.
தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.

By

Published : May 16, 2021, 5:08 PM IST

திருச்சி வரகனேரி ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று (மே.16) ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கரோனா தடுப்பு பணிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறோம். அடுத்தகட்டமாக மக்கள் பணியிலும் கவனம் செலுத்கிறோம். இந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரகனேரி ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு கால்வாய் சுத்தப்படுத்தப்படும்.

தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.

கடந்த பத்து ஆண்டுகளாக வாய்க்காலை தூர் வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து பலமுறை மனு கொடுத்தனர். அலுவலர்கள் பணி செய்ய தயாராக இருந்தபோதும் ஆட்சியாளர்கள் ஒத்துழைக்கவில்லை. தற்போது ரெட்டை வாய்க்கால் தூர் வாரப்படுதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மக்கள் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ரெட்டை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது.

அதனால் ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புகளில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். எனினும் அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் மீண்டும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது.

இதன் காரணமாக கழிவு நீரும் அருகிலுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கிறது. எனவே பாதாள சாக்கடை குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை அகற்றப்படும். வாய்க்காலில் ஆகாயத்தாமரை படரும் ஆரம்ப இடத்திலேயே இதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க : கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details