தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய ஏழு பேர் கைது - திருச்சியில் மான் வேட்டை

திருச்சி: தச்சங்குறிச்சி வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடியது தொடர்பாக ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மான் வேட்டை கைது
மான் வேட்டை கைது

By

Published : Jun 8, 2020, 5:27 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால், ஓமாந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பலர் தச்சங்குறிச்சி வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் சுஜாதாவுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில், முள்ளால் பகுதியைச் சேர்ந்த மதி என்பரவது வீட்டில், காட்டுப்பன்றி இறைச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (45), கதிரேசன் (34), கண்ணன் (29), பாலு (43), சுரேஷ் (36), சிங்காரவேலு (58) ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மான் தோல், மான் கொம்புகள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details