திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் 51 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில் ஏற்கனவே 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவயது குழந்தை உள்பட ஏழு பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இவர்களோடு சேர்த்து இதுவரை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர் அவர்களை வழியனுப்பிவைத்தனர்.
கரோனா தொற்றிலிருந்து மீண்ட சிறுவன் குணமடைந்தவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாள்கள் வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் என மொத்தம் 17 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா: விரைவில் நல்ல காலம் பிறக்குது...