திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும் பயணிகள் வெளிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செல்வதற்காக ஸ்கூட் விமானம் தாயார் நிலையில் இருந்தது.
விமானத்தில் கடத்தவிருந்த ரூ.25 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்! - smuggled from Trichy Airport
திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு கடத்தவிருந்த சுமார் ரூ.25,84,685 மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 29,950 யூரோ வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து இந்திய மதிப்பில் ரூ.25,84,685 மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்