திருச்சி:துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 மதிப்புள்ள 176 கிராம் தங்கத்தை பவுடர் வடிவில் கடத்தி வரப்பட்டதை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம், கரன்சி நோட்டுகள் மற்றும் உயிரினங்களான பறவைகள் மற்றும் பாம்புகள் போன்றவைகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்11) துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் பயணிகளை சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க:சிலப்பதிகாரம் பற்றி பெரியார் என்ன கூறினார் என கனிமொழி எம்பி படிக்க வேண்டும் - அண்ணாமலை காட்டம்!