திருச்சி:திருவெறும்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது.
தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்ற வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுத்தும்.
இவர்கள் ஆட்சியாளர் இல்லை இவர்கள் வரி என்ற பெயரில் இருக்கிறார்கள்.
இது மாறி மாறி தான் நடைபெறும். பொங்கலுக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவதற்காக குஜராத்தில் கொள்முதல் செய்து வழங்கினர். அப்போது அங்கு கட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல் தான் தமிழகத்திலும் ஏற்படும். சாதனை என்று சொல்ல முடியாது. நாடும் நாட்டு மக்களும் அனுபவித்த வேதனைகளை தான் விளக்கி பேச வேண்டும். அதானியை வளர்த்து விட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்.
எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள். எந்தத் துறையிலும் ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருடைய ஆட்சி அவர்கள் என்ன வேணாலும் செய்வார்கள் கருணாநிதி இருக்கும் போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார்கள். அதே போன்று ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கும்போது உதயநிதியையும் துணை முதல்வராக ஆக்கி விடுவார்கள். திமுக மற்றும் பாஜக இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை.