தமிழ்நாடு

tamil nadu

ஜனவரி 18ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்டிபிஐ அறிவிப்பு!

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது.

By

Published : Jan 7, 2020, 6:51 PM IST

Published : Jan 7, 2020, 6:51 PM IST

trichy sdbi pressmeet  எஸ்டிபிஐ கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்  நெல்லை முபாரக் பேட்டி  sdpi party has announced that it will block the governor's mansion jan 18  sdpi party protest  sdpi nellai muparak
நெல்லை முபாரக் செய்தியாளர் சந்திப்பு

எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுலகத்தில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நெல்லை முபாரக், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்.

இச்சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்த அதிமுக அதற்கு பிராய்சித்தமாக சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் இயற்றவேண்டும். டெல்லியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐந்தாயிரம் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை முபாரக் செய்தியாளர் சந்திப்பு

அதன் ஒரு பகுதியாக மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவுள்ளோம். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயலில் காவல்துறை ஈடுபடக்கூடாது.

நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் எஸ்டிபிஐ கட்சி கலந்துகொள்ளும். டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த காரணத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க:' நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல ' - துரைமுருகன் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details