தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1000 கொடுக்க மனமில்லால் விதிமுறைகள் வரையறை: தமிழக அரசை சாடிய நெல்லை முபாரக்! - sdpi leader mubarak press meet

ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கொடுக்க மனமின்றி தான் திமுக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முபாரக்
எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முபாரக்

By

Published : Jul 11, 2023, 8:39 PM IST

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முபாரக்

திருச்சி:எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் மண்டல மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் திங்கட்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய முபாரக், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதத்தை வீழ்த்திட, பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் பல்வேறு இன, மொழிகளைப் பின்பற்றும் மக்கள் இருந்து வரும் நிலையில் பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவிற்குப் பொருத்தமற்றது. பா.ஜ.க தங்கள் ஆட்சியின் தோல்வியை மறைக்கவே இந்த சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே தவிர அதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என கூறவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு குறித்து பல பரிந்துரைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் குறித்து எதுவும் செயல்படுத்தாமல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் துடிப்பது மக்களைத் தான் பிளவு படுத்தப்படுத்தும். எனவே இந்த பொது சிவில் சட்டத்தைக் கண்டித்து ஜீலை 15 ஆம் தேதி சென்னையிலும், ஜீலை 16 ஆம் தேதி மதுரையிலும் போராட்டம் நடத்த உள்ளோம்.

மதச்சார்பின்மையைக் காக்கும் வகையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தைத் தமிழ்நாடு அரசு சட்டசபையில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு பதிவுத் துறையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. பதிவுத் துறையில் சேவை கட்டணத்தை உயர்த்தியிருப்பதால் விலைவாசி உயர்வு, தொழில்கள் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. எனவே அரசு அதனைத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிர் உரிமை தொகையை வழங்குவது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அதை பெறுவதற்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பார்க்கும்போது யாருக்கும் தர மாட்டேன் என எழுதி விட்டுப் போய்விடலாம். யாருக்கும் ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் என்று சொல்வதை இவ்வளவு விதிமுறைகள் உருவாக்கி தருவோம் என சொல்வது சரியல்ல. எனவே அந்த நிபந்தனைகளை தளர்த்தி அனைத்து பெண்களுக்கும் எளிதான முறையில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை கனவாகிவிடுமோ? என்கிற அச்சம் இருக்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக ஆதிநாதன் குழுவின் பரிந்துரையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். 25 ஆண்டுக்காலம் சிறைவாசம் அனுபவித்த 37 முஸ்லீம் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்... 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்? பிளான் என்ன?

ABOUT THE AUTHOR

...view details