தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிக்க சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு - பள்ளி மாணவி

மணப்பாறை அருகே குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்க சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி பலி.
குளிக்க சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி பலி.

By

Published : Apr 23, 2022, 8:49 PM IST

திருச்சி:மணப்பாறை அடுத்த வடுகபட்டிபாறையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் கெளசிகா(14). இவர் இன்று(ஏப். 23) மதியம் தனது உறவினருடன் அதே பகுதியில் உள்ள குட்டையில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதைக்கண்டு உடனிருந்தவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

ABOUT THE AUTHOR

...view details