தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100% பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி தாளாளர்கள் சங்கம் - தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கம்

திருச்சி: பள்ளி திறப்பின்போது மாணவர்களின் 100 விழுக்காடு பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

100% பாதுகாப்புடன் பள்ளி திறக்கப்படும்- பள்ளி தாளாளர்கள் சங்கம்
100% பாதுகாப்புடன் பள்ளி திறக்கப்படும்- பள்ளி தாளாளர்கள் சங்கம்

By

Published : Nov 2, 2020, 3:31 PM IST

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் மிஷன் இந்தியா திட்டத்தின்கீழ் கடனுதவி பெறுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மிஷன் இந்தியா திட்டத்தின் அகில இந்திய தலைவர் ராஜேஷ் மிஸ்ரா, செயலாளர் குல்தீப் சிங், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கடன் திட்டம் குறித்து விளக்கிப் பேசினர். இந்தக் கூட்டத்தில் தாளாளர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர், மாநிலத் தலைவர் நிர்மலா சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது மாநிலப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், "கரோனா ஊரடங்குக்கு பின்னர் பள்ளிகள் வரும் 16ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் 100 விழுக்காடு பாதுகாப்பை மாணவர்களுக்கு உறுதிசெய்யும் வகையில் பள்ளி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மிஷன் இந்தியா திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. குறைந்த வட்டியில் வழங்கப்படும் இந்தக் கடன் உதவி குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details