தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை - அசத்திய பள்ளி மாணவர்கள்! - சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்கள்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரின் மகன்கள் உள்பட மாணவர்கள் பலர் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

Etv Bharat தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை
Etv Bharat தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை

By

Published : May 1, 2023, 9:13 PM IST

தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை

திருச்சி:சர்வதேச உழைப்பாளர் மே தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி, ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலை இளமணி, சுகிதா புதிய உலக சாதனைப் படைத்தனர். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தனர்.

இந்த மூவரின் சாதனைகள் துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த உலக சாதனையை துபாயில் இருந்து வருகை புரிந்த ஐன்ஸ்டன் புத்தக இயக்குநர் கார்த்திக் குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் மோனிகா ரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனைச் சான்றிதழை வழங்கினார்கள்.

மேலும் அமெரிக்க உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற 280க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தார்கள். இந்த சாதனையானது அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்க உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்தியத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்திநராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு சாதனைச் சான்றிதழை வழங்கினார். மேலும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தா, கொடைக்கானல் விவேகனந்த வித்யாலயா பள்ளிச்செயலர் சாதனை மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்கள்.

இதையும் படிங்க:ஐபிஎல் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களின் புல்லட்டை குறிவைத்து திருடும் கும்பல்... சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details