தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயமான மாணவி: காவல் நிலையம் முற்றுகை - manapparai

திருச்சி: மாயமான பள்ளி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

காவல் நிலையம் முற்றுகை
காவல் நிலையம் முற்றுகை

By

Published : Jul 23, 2021, 2:35 AM IST

மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த ஜூலை 20ஆம் தேதி அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி மாயமானார்.

இதனையடுத்து மகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்த விசாரணையில் மூன்று நாள்களாகியும் மாயமான மாணவி குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணமல்லி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாயமான மாணவியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details