தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தமர் கோயிலில் சசிகலா சிறப்பு தரிசனம்! - திருச்சியில் உத்தமர் கோயிலில் சசிகலா சிறப்புத் தரிசனம்

திருச்சியில் உள்ள உத்தமர் கோயிலில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்ட சசிகலா சாலை மார்க்கமாகவே நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களில் இருக்கும் கோயில்களுக்கும் செல்ல இருக்கிறார்.

சசிகலா உத்தமர் கோயிலில் சிறப்பு தரிசனம்.. அடுத்து சேலம் நோக்கி ஆன்மிக பயணம்..
சசிகலா உத்தமர் கோயிலில் சிறப்பு தரிசனம்.. அடுத்து சேலம் நோக்கி ஆன்மிக பயணம்..

By

Published : Apr 11, 2022, 2:50 PM IST

திருச்சி:தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தொடர்ந்து தரிசனம் மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா இன்று (ஏப்.11) திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள மும்மூர்த்திகள் திருத்தலமான உத்தமர் கோயிலில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார்.

சசிகலா ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் செல்லும் எல்லா இடங்களிலும் திரண்டு உற்சாக வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த சசிகலாவிற்கு அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றான உத்தமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

சசிகலா உத்தமர் கோயிலில் சிறப்பு தரிசனம்.. அடுத்து சேலம் நோக்கி ஆன்மிக பயணம்..

சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் வீற்றிருக்கும் உத்தமர்கோயில் திருத்தலத்தில் முன்னதாக பெருமாளைத் தரிசனம் செய்த பின்னர் தாயார் சன்னதி, சிவன் சன்னதி பிரம்மா, சரஸ்வதி உள்ளிட்ட சன்னதிகளில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.

இது திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோயில், அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடிய உள்ளனர். இக்கோயில், இது போல பல சிறப்புகளை பெற்றது.

இதே போல் திருவாசி அருகே உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சசிகலா தரிசனம் மேற்கொண்டார். இதனையடுத்து சாலை மாரகமாகவே நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களில் இருக்கும் கோயில்களுக்கும் செல்ல இருக்கிறாராம்.

இதையும் படிங்க: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் - நீதிமன்றம் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details