திருச்சி:கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர மற்றும் 37 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதனிடையே பேரூராட்சி அலுவலக ஆய்வாளர் புவனேஸ்வரிக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகாத வார்த்தைகளில் திட்டியதாக சுகாதார ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சுகாதார ஆய்வாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்
திருச்சி மாவட்டம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அந்த வகையில், இன்று (மே 7) காலை பேரூராட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டின்போது சுகாதார ஆய்வாளர் புவனேஷ்வரி பணியாளர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக சிலர் கூறுகின்றனர்.
இதனால் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பேரூரட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் சம்பவயிடத்திற்கு விரைந்து, தூய்மை பணியாளர்களை சமாதானம் செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: நகராட்சி அலுவலக மேலாளரை தகாத வார்த்தைகளால் வசைபாடிய பெண்