தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப்பணியாளர்கள் பணிநீக்கம்: மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி போராட்டம்! - sanitary workers protest against layoff in trichy

திருச்சி: பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சிஐடியு சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

sanitary workers protest against layoff in  trichy
sanitary workers protest against layoff in trichy

By

Published : Jun 26, 2020, 11:50 AM IST

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிவந்த 20 பேர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும், கடந்த 6 மாத காலமாக வேலையில்லாமல் வஞ்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமைவகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார்.

இதில் சிஐடியு நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வி, மணிகண்டன், மணிமாறன், வீரமுத்து, சீனிவாசன், ஜெயபால், பிரமிளா, கரிகாலன், ராஜா, பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க...'தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி' - ஓவியம் வரைந்து உலக சாதனை படைக்கும் குழந்தைகள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details