திருச்சி:மணப்பாறை அருகேயுள்ள சத்திரப்பட்டி குளத்தில் நேற்று (செப். 7) காலை மணல் கொள்ளை நடப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவரின் தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அலுவலர்கள் வருவதைக் கண்ட ஜேசிபி, டிப்பர் லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய ஜேசிபி, டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்த தனிப்படையினர் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.