திருச்சிமாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கத் தேரோட்டம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பக்தர்கள் கட்டண அடிப்படையில் தங்கள் வேண்டுதலை, பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காகத் தங்கத்தேர் இழுக்கும் நடைமுறை இருந்தது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புனரமைக்கப்பட்ட தங்கத் தேரின் தேரோட்ட நிகழ்வு இன்று (டிச.15) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தங்கத் தேரோட்டம் மீண்டும் தொடக்கம் இதனையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கத் தேரோட்டம் தொடங்கி இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கதிரவன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் - அண்ணாமலை