தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராபர்ட் கிளைவுக்கு பாடம் புகட்டிய அம்மன் - சமயபுரம் மாரியம்மன் வரலாற்றில் ஒன்று! - ராபர்ட் கிளைவுக்கு பாடம் புகட்டிய அம்மன்

சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் பூச்சொரிதல்' விழாவின் வரலாற்றையும், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவுக்கு அம்மன் புகட்டிய பாடம் குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

trichy samayapuram history  samayapuram amman  samayapuram amman temple  poosorithal festival  samayapuram amman temple poosorithal festival  robert clive history  சமயபுரம் மாரியம்மன் வரலாறு  சமயபுரம் மாரியம்மன்  சமயபுரம் மாரியம்மன் கோயில்  சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வரலாறு  ராபர்ட் கிளைவுக்கு பாடம் புகட்டிய அம்மன்  ராபர்ட் கிளைவ் வரலாறு
சமயபுரம் மாரியம்மன் கோயில்

By

Published : Apr 10, 2022, 11:08 PM IST

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் என்றவுடனே, நம் நினைவில் வந்து நிற்பது அம்மனுக்கு நடைபெறும் 'பூச்சொரிதல்' விழாதான். கூடை கூடையாக அம்மனுக்கு மலர் சாத்தும் நிகழ்வு பெரும் விமரசையாக நடைப்பெறும்.

பச்சைப்பட்டினி முடிந்த 28 நாள்களும் விசேஷமாக கொண்டாடப்பட்டாலும், மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை ஒவ்வொரு வாரமும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

தங்கை மாரியம்மனுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூக்களே, இவ்விழாவில் முதலிடம் பெறுகின்றது. பூச்சொரிதல் விழா உருவாகக் காரணமான அற்புத நிகழ்வைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம் என கேட்பது போலத்தான் இருக்கும் இந்தச் சம்பவம். ஆனால் அதுதான் உண்மை.

நாய்வாலை நிமிர்த்த முடியுமா: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவ், 1725ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள், இங்கிலாந்தில் உள்ள டிரேட்டன் சந்தை அருகில் பிறந்தார்.

இளவயதில் சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டுவது, ரகளையில் ஈடுபடுவது என பெரும் தலைவலியாக இருந்தார். இதனால் வெறுப்பான அவர் தந்தை ரிச்சர்ட், தனது தங்கை வீட்டில் ராபர்ட் கிளைவை இடம் மாற்றினார்.

நாய்வாலை நிமிர்த்த முடியுமா? லண்டன் நகர வீதிகளிலும் அதே ரகளை என திரிந்துள்ளார். இது சரிபட்டு வராது என கருதிய தந்தை ரிச்சர்ட் 1743ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்தியாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கணக்கெழுதும் கிளார்க் வேலைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது கிளைவுக்கு 18 வயது. கிட்டத்தட்ட 18 மாதப் பயணத்துக்குப்பிறகு, சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு சம்பளம் ஆண்டுக்கு 5 பவுண்ட், அன்றைய இந்திய மதிப்பில் 50 ரூபாய்.

திருச்சியில் ஆல்ட்: இந்த சமையம் கிளார்க் வேலையில் நாட்டமில்லாமல் இருந்த ராபர்டுக்கு ஜாக்பாட் அடித்தது. பிரான்ஸ் வசம் இருந்த திருச்சியைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டி நிலவியது. பிரெஞ்சுப் படைகள் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு இருந்தனர். அவர்களைத் தாக்குவதற்காக, ஆங்கிலப் படைகளுக்கு தலைவராக கிளைவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

கிளைவுடன் தளபதிகளான ஜின்ஜின், டால்டன், லாரன்ஸ் ஆகியோர் தங்கி இருந்தனர். தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொட்டகை அமைத்துப் பாதுகாத்தனர்.

எனவே இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது வேனிற்கட்டிகளாலும் அம்மை நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின்ஜின் நள்ளிரவில் ஆயுதங்கள் இருந்த கொட்டகையைப் பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தார்.

காட்சியளித்த அம்மன்:அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் தனது இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்திச் சென்றாள். யார் நீ ? நில் என்று கத்தினார் ஜின்ஜின். ஆனால், அவனது குரலைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் சென்றாள்.

உடனே ஜின்ஜின் தன் கைத்துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணை நோக்கிச் சுட்டான். அப்போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்ததாம், துப்பாக்கித் தோட்டாக்கள் அனைத்தும் பூக்களாக மாறி, அந்தப் பெண்ணின் தலையில் விழுந்தன.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு வெளியே வந்த ஊர் மக்கள் ஜின்ஜின்னிடம், 'தவறு செய்துவிட்டீர்கள், எங்கள் காவல் தெய்வம் மாரியம்மனை சுட்டுவிட்டீர்கள்' என்று கூறியுள்ளனர். இதை நம்பாமல் ஜின்ஜின் வேகமாக ஆலயத்துக்குள் ஊர்மக்களுடன் சென்று பார்த்தார்.

அப்போது கருவறையில் அம்மன் இல்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. பீடத்தில் மீண்டும் அம்மன் வந்தமர்ந்தாள். அனைவரும் விழுந்து வணங்கினர்.

புகட்டப்பட்ட பாடம்: ஜின்ஜினுக்கு கண்பார்வை பறிபோய் இருந்தது. இதனை ஆளுநர் ராபர்டிடம் பகிர்ந்து கொண்டு இருக்கையில் ஊர்மக்களின் அறிவுரையைக் கேட்டு மாரி அம்மனிடம் ராபர்ட் கிளைவுடன் வந்து மன்னிப்பு கேட்டார். மூன்று நாள் கழித்து கண்பார்வை பெற்றான். ராபர்ட்டிற்கும் அம்மை நோய் நீங்கியது.

இந்த நிகழ்வில் இருந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவானது வெகு சிறப்பாக நடைபெறுகிற்று வருகிறது என்று ஊர் மக்கள் இன்றுவரை நம்புகிறார்கள். சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன். தமது நாவல் ராஜபேரிகையில் கிளைவ் அம்மை குணமானதற்கு நன்றிக்கடன் செலுத்தியதாக குறிப்பிடுகிறார், ஆனால் இதனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஶ்ரீரங்கம் கோயிலில் இருந்து இங்கே அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறும் இவர்கள், இன்றும் ஶ்ரீரங்கத்தில் இருந்து சீதனம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்கிற கல்வெட்டு இருப்பதாக கூறுகிறார்கள். கதை என்னவோ சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும் எதை விடுப்பது எதை எடுப்பது என்றே தெரியவில்லை.

இதையும் படிங்க: தர்மபுரியில் ஸ்ரீராமர்- சீதாதேவி திருக்கல்யாணம்

ABOUT THE AUTHOR

...view details