திருச்சி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்தில் பயணம் செல்லும் பயணிகள், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் திருட்டுச் சம்பவம் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருச்சியில் பேருந்து பயணிகளிடம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்
திருச்சி மாநகரப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களது பொருள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் அறிவுரை வழங்கினார்.
அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு (டிச.20) திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் செல்லும் அரசுப்பேருந்தில் திருச்சி பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் பேருந்தில் பயணம் செய்யும், பயணிகளிடம் தங்களது பொருள்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும்; செல்போன் பேசிக்கொண்டு இருந்தால் உங்கள் பொருள்களை நீங்கள் இழக்க நேரிடும் எனவும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும்பாராட்டைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க:செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!