திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகளில் இரண்டு விழுக்காடு நபர்களுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை செய்து பிஎஃப் 7 வகை தொற்று பாதிப்பு உள்ளதா என கண்டறியும் வகையில் இன்று முதல் பரிசோதனை தொடங்கியுள்ளது.
பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் மற்றும் சோதனை நடத்தக் கூடியவர்கள் பட்டியலை விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்க உள்ளனர். BF.7 வகை கரோனா வைரஸ் பரவலை தடுக்க இரண்டு சதவீதம் என்பது சுமாராக 20 வெளிநாட்டு பயணிகளிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.