திருச்சி மாவட்டம் கே.கே. நகர், எல்.ஐ.சி காலனி பகுதியில் இந்திரா மளிகை, ஆயில் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையை அதன் உரிமையாளர், ஊழியர்கள் நேற்று (நவ.18) இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று (நவ.19) அதிகாலை கடையில் இருந்து புகை மூட்டம் வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது.
இதைப் பார்த்த நபர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
உரிமையாளர் கடைக்கு வந்து பார்த்ததில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மளிகை, எண்ணெய் பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என கே.கே.நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சேரியில் தீ விபத்து;30க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதம்